சிரஞ்சீவியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ராம்கோபால் வர்மா | பிளாஷ்பேக்: “பராசக்தி”க்கு முன் வெளிவர இருந்த சிவாஜியின் “பூங்கோதை” | அப்பா படத்தையடுத்து மகன் படத்தின் அப்டேட் | ‛ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா உறுதி : எங்கே தெரியுமா? | மீண்டும் ‛டக்கர்' பட இயக்குனருடன் கைகோர்த்த சித்தார்த்! | ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணைந்து நடித்துள்ள கணவர், மனைவி! | ‛ரெட்ட தல' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளத்துக்கு கட்டுப்பாடு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி | சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார் | சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி |

சசி இயக்கிய பூ படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் ராமு. தொடர்ந்து நீர்ப்பறவை, தங்கமீன்கள், பரியேறும் பெருமாள், கர்ணன், சூரரைப்போற்று உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சிறந்த குணச்சித்ர நடிகராக வலம் வரும் இவர் தனது கேரக்டருக்கான நடிப்பை அப்படியே பிரதிபலித்து ரசிகர்களின் அன்பை பெற்றுள்ளார்.
இந்நிலையில் ராமு திடீரென உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் நலம் பெற வேண்டி ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.