சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

தெலுங்கில் பிரபல தெலுங்கு நடிகை கிரித்தி ஷெட்டி இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'தி வாரியர்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் இருந்து வெளியான 'புல்லட்டு' என்ற பாடல் மாபெரும் ஹிட்டாகி உள்ளது. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற கிரித்தி ஷெட்டியிடம் தென்னிந்திய சினிமாவில் பிடித்த நடிகர்கள் பற்றி கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த அவர், "தென்னிந்திய சினிமாவில் பல நடிகர்களை எனக்கு பிடிக்கும். தமிழ் சினிமாவில் விஜய் எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடன் இணைந்து நடிக்க ஆசைப்படுகிறேன். தகுந்த நேரம் வரும்போது அது நடைபெறும் என்று எதிர்பார்க்கிறேன்" என்று கூறியுள்ளார். கிரித்தி ஷெட்டி, தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் வெங்கட் பிரபு இயக்கி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.