பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா | ஆதித்யா பாஸ்கர், கவுரி கிஷன் மீண்டும் இணைந்தனர் | மீண்டும் தமிழில் நடிக்கும் அன்னாபென் | அரசன் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சிவாஜி குடும்பத்தை கவுரவிக்கும் பராசக்தி படக்குழு | விஜய் தேவரகொண்டாவிற்கு வில்லன் விஜய் சேதுபதி...? | சூர்யா 47 : நெட்பிளிக்ஸ் முதலீட்டில் அமோக ஆரம்பம் ? |

விஜய்சேதுபதி நாயகனாக நடித்த இரண்டாவது படமான நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் அவருக்கு ஜோடியாக சிறிய கேரக்டரில் நடித்தவர் காயத்ரி. அதன் பிறகு அவருடன் இணைந்து ரம்மி, புரியாத புதிர், சூப்பர் டீலக்ஸ், துக்ளக் தர்பார், விக்ரம் படங்களில் நடித்தார். விஜய்சேதுபதியுடன் அதிக படங்களில் நடித்தவர் காயத்ரி தான்.
இந்த நிலையில் தற்போது அவர் விஜய்சேதுபதியுடன் இணைந்து நடித்திருக்கும் படம் மாமனிதன். வருகிற 24ம் தேதி இந்த படம் வெளிவருகிறது. காயத்ரி நல்ல நடிகை அவருடன் நிறைய படத்தில் நடித்திருக்கிறேன். இன்னும் எத்தனை படங்களில் வேண்டுமானாலும் நடிப்பேன் என்று விஜய்சேதுபதி கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது: மாமனிதன் படத்தில் எனது மனைவி சாவித்ரியாக காயத்ரி நடித்திருக்கிறார். இரண்டு குழந்தைகளுக்கு தாய் என்பதால் பலர் நடிக்க தயங்கிய கேரக்டரில் காயத்ரி துணிச்சலாக நடித்தார். அதுவும் மேக் போடாமல், உடல் எடையை கூட்டி நடித்தார். காயத்ரி அற்புதமான நடிகை அவரது திறமை இன்னும் முழுமையாக வெளிப்படவில்லை. தொடர்ந்து அவர் தன் திறமைகளை வெளிப்படுத்தி அடுத்தடுத்த கட்டங்களுக்கு உயர்வார். படத்தில் நடிக்க கமிட் ஆகிவிட்டால் அதற்கான நிறைய அர்பணிப்புடன செயல்படுவார், கடுமையாக உழைப்பார். அவருடன் நிறைய படங்களில் நடித்து விட்டேன். இன்னும் எத்தனை படங்களில் வேண்டுமானாலும் அவருடன் நடிப்பேன். என்றார்.