'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
வெற்றிச் செல்வன், அழகுராஜா, கபாலி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே. தற்போது ஹிந்தியில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார். மற்ற நடிகைகள் போன்று கமர்ஷியல் நாயகியாக அல்லாமல் தேர்ந்தெடுத்த படங்களில், போல்டான வேடங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் அளித்த ஒரு பேட்டியில் சினிமாவில் தான் அறிமுகமான புதிதில் தான் சந்தித்த விஷயங்கள் குறித்து மனம் திறந்துள்ளார்.
அவர் கூறுகையில், ‛‛சினிமாவுக்கு நான் அறிமுகமான புதிதில் பலர் உடலில் சர்ஜரி செய்யும்படி கூறினார்கள். அதாவது மூக்கு, மார்பகம், கன்னம், கால்கள், தொடை ஆகியவற்றை சர்ஜரி செய்து இன்னும் அழகாக மாற்றும்படி கூறினர். சிலர் தலைமுடியில் வண்ணம் தீட்ட சொன்னார்கள். இவர்கள் கூறியதை கேட்டு எனக்கு கோபம் தான் வந்தது. ஆனாலும் அதன்பிறகு எனது உடலை இன்னும் அதிகமாக நேசிக்க தொடங்கினேன்'' என்றார் ராதிகா ஆப்தே.