பிளாஷ்பேக்: 'முக்தா' சீனிவாசன் என்ற முத்தான இயக்குநரைத் தந்த “முதலாளி” | ஹீரோயின் ஆனார் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா | சர்வதேச திரைப்பட விழாவில் அனுபமா படம் | 4 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ராய் லட்சுமி | நடிகை பலாத்கார வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு: தண்டனையிலிருந்து தப்புவாரா திலீப் | கணவர் சித்ரவதை செய்வதாக பாலிவுட் நடிகை வழக்கு | பிளாஷ்பேக் : விஜயகாந்துக்காக மாற்றப்பட்ட கதை | தெலுங்கு பேச பயிற்சி எடுக்கும் பிரியங்கா சோப்ரா | கணவர் மீது புகார் அளித்துள்ள செலினா ஜெட்லி | பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோயின் |

கமல் நடிப்பில் விக்ரம் படத்தை இயக்கியுள்ள லோகேஷ் கனகராஜ் அடுத்தபடியாக மாஸ்டர் படத்தை தொடர்ந்து மீண்டும் விஜய் நடிக்கும் 67 வது படத்தை இயக்கப் போகிறார். இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் அளித்த ஒரு பேட்டியில், தெலுங்கு நடிகர் ராம் சரண் தேஜாவிடம் தான் ஒரு கதை சொல்லி இருப்பதாகவும், விரைவில் தாங்கள் இணைய இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். அப்படி ராம்சரணை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம் விக்ரம் படத்தின் அடுத்த பாகமாக இருக்க வாய்ப்பிருப்பதாக என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற வேடத்தில் சூர்யா நடித்த நிலையில் இப்படத்தின் அடுத்த பாகத்தில் கமல்ஹாசனின் பேரனாக ராம்சரண் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. அந்தவகையில் படத்தில் சூர்யாவும், ராம்சரண் தேஜாவும் எதிரும் புதிருமான வேடங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அடுத்தபடியாக விஜய்யின் 67ஆவது படம் மற்றும் கார்த்தியின் கைதி-2 படங்களை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்று கூறப்படும் நிலையில், அதன் பிறகு விக்ரம் படத்தின் அடுத்த பாகத்தை அவர் இயக்க வாய்ப்பு உள்ளது. அதனால் அப்போதுதான் அப்படம் விக்ரம் படத்தின் அடுத்த பாகமா? இல்லை ராம்சரண் தேஜாவை நாயகனாக வைத்து தமிழ், தெலுங்கில் லோகேஷ் கனகராஜ் இயக்கப்போகும் படமா? என்பது தெரியவரும்.