ஹீரோயின் ஆனார் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா | சர்வதேச திரைப்பட விழாவில் அனுபமா படம் | 4 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ராய் லட்சுமி | நடிகை பலாத்கார வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு: தண்டனையிலிருந்து தப்புவாரா திலீப் | கணவர் சித்ரவதை செய்வதாக பாலிவுட் நடிகை வழக்கு | பிளாஷ்பேக் : விஜயகாந்துக்காக மாற்றப்பட்ட கதை | தெலுங்கு பேச பயிற்சி எடுக்கும் பிரியங்கா சோப்ரா | கணவர் மீது புகார் அளித்துள்ள செலினா ஜெட்லி | பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோயின் | அவரா? இவரா? வேறு யாருமா? குழப்பத்தில் ரஜினி படம் |

விஜய் நடிக்கும் 66வது படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கி வருகிறார். முதன்முதலாக விஜய், தெலுங்கில் அறிமுகமாகும் இந்தப் படத்தில் அவருடன் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, ஸ்ரீகாந்த், யோகி பாபு உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்நிலையில் விஜய் 66வது இடத்தில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு ஒரு கெஸ்ட் ரோலில் நடிப்பதாக டோலிவுட்டில் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
விஜய் நடிக்கும் முதல் தெலுங்கு படம் என்பது மட்டுமின்றி, வம்சி உடனான நட்பு காரணமாக இந்த படத்தில் கெஸ்ட் ரோலில் நடிப்பதற்கு மகேஷ்பாபு ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இப்படியொரு தகவல் வெளியானதை அடுத்து விஜய்யை 66வது படத்திற்கு தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது . மகேஷ் பாபு தெலுங்கில் நடித்த மகரிஷி என்ற படத்தை வம்சி தான் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.