பிளாஷ்பேக் : மம்முட்டி வேண்டாம் என ஒதுக்கிய டைட்டில் மோகன்லாலுக்கு கிரீடம் சூட்டியது | கர்நாடக முதல்வரை சந்தித்த ராம்சரண் | ஜூனியர் என்டிஆர், பிரசாந்த் நீல் படத்தில் ருக்மணி வசந்த் : ரகசியம் உடைத்த மதராஸி தயாரிப்பாளர் | மருமகனுக்காக படம் தயாரிக்கும் விஜய் ஆண்டனி | ரஜினியே ரத்தத்தை நம்பி தான் படம் எடுக்கிறார் : ராதாரவி பேச்சு | இந்து தர்மத்தை சினிமாவில் சொல்வதை நினைத்து பெருமைப்படுகிறேன் : ‛ஹனுமன்' ஹீரோ | பார்வையாளர்களின் பதிலை மட்டுமே மதிக்கிறேன் : பல்லவி ஜோஷி | 100 மில்லியன் கடந்த 'முத்த மழை' மேடைப் பாடல் | 'மிராய்' டிரைலரைப் பார்த்து வாழ்த்திய ரஜினிகாந்த் | அல்லு அர்ஜுன், பவன் கல்யாண் 'மனஸ்தாபம்' முடிவுக்கு வந்ததா ? |
அருள்நிதி நடித்து முடித்துள்ள படம் டி பிளாக். இதில் அவர் கல்லூரி மாணவராக நடித்துள்ளார். ஜோடியாக அவந்திகா மிஸ்ரா நடித்துள்ளார். விஜய்குமார் இயக்கி உள்ளார். படம் பற்றி அருள்நிதி கூறியதாவது: இந்த படம் 2008 காலகட்டத்தில் நடப்பது மாதிரியான கதை. ஒரு கல்லூரிக்குள் நடக்கும் அமானுஷ்யமான பிரச்சினைகளுக்கு மாணவர்கள் இணைந்து தீர்வு காண்பது மாதிரியான கதை.
இந்த கதையை கேட்டவுடன் கல்லூரி மாணவனாக நடிக்க பயந்தேன். என்றாலும் 10 கிலோ வரை எடை குறைத்து, தாடியை அகற்றி கண்ணாடி முன் நின்று என்னை நானே கல்லூரி மாணவனாக உணரத் தொடங்கியதும் இந்த படத்தில் நடித்தேன். தொடர்ந்து என்னிடம் அறிமுக இயக்குனர்கள் தான் கதை சொல்கிறார்கள். அவர்கள் சொல்லும் கதைகள் பெரும்பாலும் த்ரில்லர் ஜார்னரில் இருக்கிறது. அதனால் அந்த மாதிரியான படங்கள் அதிகமாக வருகிறது.
பான் இந்தியா படங்களில் நடிப்பது பற்றி நான் யோசிக்கவே இல்லை. அதற்கான தகுதி இப்போது எனக்கு இல்லை என்று கருதுகிறேன். தமிழ் படங்களில் நடித்து இங்கு சாதிக்க வேண்டியதே நிறைய இருக்கிறது. என்றார்.