அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
பாலிவுட்டின் முக்கியமான இயக்குனர்களில் கரண் ஜோஹரும் ஒருவர். அவரது இயக்கத்தில் வெளிவந்த சில படங்கள் சூப்பர் ஹிட்டாக அமைந்துள்ளன. அவர் ஒரு தமிழ் நடிகையின் தீவிர ரசிகன் என்பதை இப்போது தான் சொல்லியிருக்கிறார்.
ராணா டகுபட்டி, சாய் பல்லவி இணைந்து நடித்துள்ள தெலுங்குப் படமான 'விராட பர்வம்' படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. அந்த டிரைலரைப் பார்த்துவிட்டுத்தான் கரண் ஜோஹர் இப்படி தெரிவித்துள்ளார்.
“இது மிகவும் அற்புதமாக உள்ளது ராணா. பார்க்கக் காத்திருக்கிறேன். நீங்கள் சூப்பராக இருக்கிறீர்கள். சாய் பல்லவியின் மிகப் பெரிய ரசிகன் நான்,” எனக் குறிப்பிட்டுள்ளார். கரணின் பாராட்டுக்கு, “நீங்கள் மிகவும் அன்பாவனர் சார், தாழ்மையுடன் மிக்க நன்றி,” என சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.
1990களில் நக்சலைட்களின் பின்னணியில் படமாக்கப்பட்டுள்ள 'விராட பர்வம்' படம் ஜுன் 17ம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. பிரியாமணி, நந்திதா தாஸ், நவீன் சந்திரா, ஈஸ்வரி ராவ் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.