ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சீதக்காதி, துக்ளக் தர்பார், சூப்பர் டீலக்ஸ், புரியாத புதிர் உள்பட பல படங்களில் நடித்தவர் காயத்ரி சங்கர். சமீபத்தில் வெளியான விக்ரம் படத்திலும் நடித்திருந்தார். இந்த படத்தில் காயத்ரியின் ரோல் பற்றி ஒரு மீம்ஸ் ஒன்று வைரல் ஆனது. அதாவது, திரைப்படங்களில் காயத்ரியின் கணவர் கேரக்டர்களுக்கு ஏதாவது கோளாறு இருக்கும். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் கணவர் நினைவு மறத்தல் நோயுள்ளவர், சூப்பர் டீலக்ஸ் படத்தில் கணவர் திருநங்கையாக மாறி விடுவார், விக்ரம் படத்தில் கணவர் என்ன வேலை பார்க்கிறார் என்றே தெரியாது. அவரால் உயிரும் போய்விடும். இப்படி பதிவிட்டு ஒரு மீம்ஸ் போட அதற்கு காயத்ரி, "கணவர்களுக்கும் எனக்கும் ராசியில்லை" என்று பதிவிட்டுள்ளார்.