'அவதார் ' பார்க்க 10 லட்சம் இந்தியர்கள் ஆர்வம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் வெள்ளி விழா கொண்டாடிய படம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் | திடீர் நடிகையான தயாரிப்பாளர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஸ்மிருதி வெங்கட் படம் | சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம் | ‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு | புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் | சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது |

பிரபல பாலிவுட் ஒளிப்பதிவாளர் கபீர் லால். 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் இவர் அதுர்ஷ்யா என்ற மாராட்டிய படத்தை இயக்கினார். இந்த படம் கடந்த மாதம் 20ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் உன் பார்வையில் என்ற பெயரில் தமிழ் படம் ஒன்றை கபீர்லால் இயக்கி வருகிறார். இது அதுர்ஷ்யா படத்தின் ரீமேக் என்று கூறப்படுகிறது.
திடீரென கொல்லப்பட்ட தன் தங்கையின் மரணத்திற்கு யார் காரணம் என கண் பார்வையற்ற நாயகி தேட ஆரம்பிக்கிறாள். அவளின் தேடலும், அதை தொடர்ந்து நடக்கும் மர்மமான சம்பவங்களும் தான் கதை. பார்வதி நாயர் கதையின் நாயகியாக நடிக்கிறார். அவரது கணவராக கணேஷ் வெங்கட்ராம் நடிக்கிறார்.
இவர்களுடன் நிழல்கள் ரவி, துளசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள், இன்ஸ்பெக்டராக தயாரிப்பாளர் அஜய் குமார் சிங் நடித்துள்ளார். படத்தின் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்ட நிலையில், படத்தின் வெளியீட்டு பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.




