நவ., 22ல் ரிலீஸாகும் மிருணாள் குல்கர்னியின் ‛தாய் ஆகர்' | முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்த நடிகை கஸ்தூரி | பாலகிருஷ்ணாவிடம் சூர்யாவை மாட்டி விட்ட கார்த்தி | குபேரா படம் பற்றி ராஷ்மிகா வெளியிட்ட அப்டேட் | 2024 - தீபாவளி படங்கள் கற்றுத் தந்த பாடம் என்ன? | 'புஷ்பா 2' பதிவுகளை புறக்கணிக்கும் தேவி ஸ்ரீ பிரசாத் | விடை பெற்றார் நடிகர் டெல்லி கணேஷ் ; வான் படை சார்பில் அஞ்சலி : உடல் தகனம் | பிளாஷ்பேக்: “தாய்க்குப்பின் தாரம்” தந்த தரமான 'காளை'யின் பின்னணி | சின்னத்திரைக்கு திரும்பிய நடிகர் அசோக் | பிளாஷ்பேக்: சாக்லெட் பாய் சிவகுமாரை தாதா ஆக்கிய 'வண்டிச் சக்கரம்' |
இசை ரசிகர்களால் கேகே என்று செல்லமாக அழைக்கப்பட்ட கிருஷ்ண குமார் கடந்த மாதம் 31ம் தேதி கோல்கட்டாவில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவரது மரணத்துக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டது. மறைவு குறித்து வெளியான மருத்துவ அறிக்கையில் அவருக்கு உடனடி சிகிச்சை அளித்திருந்தால் காப்பாற்றி இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் வழக்கறிஞர் ரவிசங்கர் சட்டோபாத்யாய் என்பவர் கோல்கட்டா உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: கே.கே கோல்கட்டாவில் நடைபெற்ற நிகழ்ச்சிக்காக 2 நாட்கள் அங்கு தங்கி இருந்துள்ளார். அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
கச்சேரி முடித்து வெளியேறிய வீடியோக்களில் கேகேவுக்கு அதிக அளவிலான வியர்வை வெளியேறுவதும், அவர் சோர்வுடன் இருப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அதனால் இதுதொடர்பான உண்மை நிலவரம் அறிந்து உண்மையை வெளிக்கொண்டு வரும் வகையில் அவரது மரண வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும். என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மனுவை நேற்று பரிசீலனை செய்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா இதனைஅவசர வழக்காக எடுத்து விசாரிப்பதாக தெரிவித்துள்ளார்.