தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் நடிப்பில் நேற்று திரைக்கு வந்துள்ள படம் ‛விக்ரம்'. அதிரடி ஆக் ஷன் படமாக வெளிவந்துள்ள இந்த படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. குறிப்பாக நான்கு ஆண்டுகளுக்கு பின் கமல் படம் வெளியாகி இருப்பதால் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த படத்தில் ரோலெக்ஸ் என்ற சிறப்பு தோற்றத்தில் சூர்யா நடித்திருந்தார். இவரின் வேடம் விக்ரம் படத்தின் அடுத்த பாகத்திற்கான லீடாகவும் மாறி உள்ளது.
இந்நிலையில் இந்த படத்தில் நடித்தது பற்றியும், கமல் உடன் நடித்த அனுபவம் பற்றியும் சூர்யா கூறுகையில், ‛‛அன்புள்ள கமல்ஹாசன் அண்ணா... எப்படி சொல்றது. உங்களுடன் நடிக்க வேண்டும் என்கிற கனவு நனவாகி உள்ளது. இந்த வாய்ப்பை ஏற்படுத்தி தந்த லோகேஷிற்கும், அனைவரின் அன்புக்கும் நன்றி'' என தெரிவித்துள்ளார்.
இதற்கு கமல், ‛‛இது நீண்டநாட்களாக நடக்க இருந்தது என்பது உங்களுக்கு தெரியும். உங்களின் அன்பு ஏற்கனவே உள்ளது. அது இன்னும் மக்களிடம் அதிகமாகிறது. உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் தம்பி. மன்னிக்க தம்பி சார்'' என பதில் கொடுத்துள்ளார்.