புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
சமீபத்தில் 52ஆவது கேரள அரசு விருதுகள் அறிவிக்கப்பட்டன. இந்தப்பட்டியலில் மோகன்லால், மம்முட்டி, பிரித்திவிராஜ் என முன்னணி நடிகர்களின் படங்கள் எந்த விருதுகளையும் கைப்பற்றவில்லை என்பது ஒரு பக்கம் இருக்க, அதிக விருதுகளை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்ட சில படங்களுக்கும் எந்த விருதும் கிடைக்கவில்லை என்பது ரசிகர்களையும் விமர்சகர்களையும் அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கி இருக்கிறது.
அதில் குறிப்பாக கடந்த வருடம் வெளியான ஹோம் என்கிற திரைப்படம் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. கேரள அரசு விருதுக்காக இந்த படம் அனுப்பப்பட்டபோது நிச்சயம் பல விருதுகளை இந்தப்படம் கைப்பற்றும் என்று பலரும் கூறி வந்தனர். ஆனால் இந்த படத்திற்கு ஒரு பிரிவில் கூட விருது அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் இந்த வருடத்திய விருது பட்டியல் குறித்து முதல் சர்ச்சையாக இது கிளம்பியுள்ளது. இந்த படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் இந்திரன்ஸ் தனது வருத்தத்தை தற்போது வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, ஒருவேளை இந்த படத்தை தேர்வுக்குழு தலைவர் பார்க்காமல் விட்டு விட்டாரோ என்னவோ..? இந்த படம் சில விருதுகளை பெரும் என எதிர்பார்த்தேன்.. ஆனால் அது நடைபெறவில்லை.. ஒருவேளை இந்த படத்தின் தயாரிப்பாளர் விஜய்பாபு என்பதால் தான் இப்படி நிகழ்ந்து விட்டதோ” என்று கூறியுள்ளார் இந்திரன்ஸ்
இவர் குறிப்பிடும் தயாரிப்பாளர் விஜய்பாபு தான், கடந்த சில நாட்களாக நடிகை ஒருவர் அளித்த பாலியல் குற்றச்சாட்டு புகார் காரணமாக போலீசாரிடம் சிக்காமல் வெளிநாட்டில் தலைமறைவாக இருந்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து நடிகர் இந்திரன்ஸ் மேலும் கூறும்போது, “ஒரு குடும்பத்தில் உள்ள ஒருவர் தவறு செய்தார் என்பதற்காக மொத்த குடும்ப உறுப்பினர்களையும் தண்டிப்பது எந்த வகையில் நியாயம்..? இப்போது விஜய்பாபு குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.. ஒருவேளை நாளை அவர் நிரபராதி என நிரூபிக்கப்பட்டால் இந்த படத்திற்கு எந்த விதமாக நியாயம் செய்யப்படும்” என்கிற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.