மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
75வது கேன்ஸ் பட விழா கடந்த மே 17ம் தேதி தொடங்கி நடைபெற்றது. இதில் உலகமெங்கிலும் இருந்து ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த படங்களும் இதில் திரையிடப்பட்டன. பார்த்திபன் இயக்கிய சிங்கிள் ஷாட் படமான இரவின் நிழல், மாதவனின் ராக்கெட்ரி உள்ளிட்ட படங்கள் திரையிடப்பட்டன.
நிறைவு விழாவில் சிறந்த படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. அனைத்து விருதுகளையும் மேற்கத்திய நாட்டு படங்களே வழக்கம்போல அள்ளிச் சென்றது. முதன் முறையாக ஒரு பாகிஸ்தானி படம் விருது வென்றது. இந்தியாவை பொருத்தவரை ஷானக் சென் இயக்கிய ஆல் தட் ப்ரீத்தஸ் என்ற ஆவணப்படம் விருது பெற்றது. அதற்கு கோல்டன் ஐ விருது வழங்கப்பட்டது.
தலைநகர் டில்லி மாசடைந்து வருவது குறித்தும், அந்த மாசுக்கு இடையில் மாட்டிக்கொண்ட ஒரு பருந்தையும், அந்த பருந்தை காப்பாற்ற போராடும் இரு சிறுவர்களையும் பற்றியும் இந்த படம் உருவாகி உள்ளது. இந்திய அளவில் ஏற்கெனவே பாராட்டையும், விருதுகளையும் பெற்ற படம், தற்போது கேன்ஸ் விருதையும் வென்றிருக்கிறது.