பராசக்தி முதல் பாடலான 'அடி அலையே' வெளியீடு | தயாரிப்பாளர்களுக்கு கூட பாடல் உரிமையை வழங்கியது இல்லை: இளையராஜா | 'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு : நவ., 8ல் முதல் பாடல் | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் |

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான 7 சி தொடரில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஸ்ரீநிதி விஜய். தொடர்ந்து பகல்நிலவு, வள்ளி, யாரடி நீ மோகினி, நினைத்தாலே இனிக்கும் ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார். அஜித் நடிப்பில் வெளியான வலிமை படத்தை விமர்சித்து சர்ச்சையில் மாட்டிக்கொண்ட ஸ்ரீநிதி, இன்ஸ்டாவில் தொடர்ந்து பல சர்ச்சையான பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
சமீபத்தில் நடிகர் சிம்புவை தான் காதலிப்பதாகவும், அவரும் தன்னை காதலிக்கிறார். என்னை அவருடன் சேர்த்து வையுங்கள் என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில், தற்போது புதிதாக தனது சக நடிகையான நக்ஷத்திரா குறித்தும் சில தகவலை வெளியிட்டுள்ளார் அவை பரபரப்பாகி உள்ளது.
ஸ்ரீநிதி வெளியிட்ட அந்த வீடியோவில், 'நக்ஷத்திரா எனது நெருங்கிய தோழி. என்னுடன் இரண்டரை ஆண்டுகள் என் அறையில் இருந்துள்ளார். சினிமா துறைக்கு மிகவும் கஷ்டப்பட்டு வந்திருக்கா. அதுக்காக சில தப்புகளையும் செய்து இருக்கா. ஆனா அவ தப்பான பொண்ணு கிடையாது. அவ ஒரு பையன காதலிக்கிறா. அவங்களுக்கு நிச்சயதார்த்தமும் முடிஞ்சிடுச்சு. ஆனா இது எதுவுமே எங்களுக்கு தெரியாது. அவளுக்கு சம்பளம் 2.5 லட்சம் ஆனா அவ அக்கவுண்ட்ல 10 ஆயிரம் ரூபாய் கூட கிடையாது. நக் ஷத்திராவை அந்த பையனின் குடும்பம் தங்களது கட்டிற்குள் வைத்துள்ளனர். சித்ராவுக்கு நடந்த மாதிரி நக்ஷத்திராவுக்கும் ஆகிடுமோன்னு எனக்கு பயமா இருக்கு. என்னை பொருத்தமட்டில் நக் ஷத்திரா அந்த குடும்பத்தை விட்டு வெளியே வர வேண்டும் என்று தான் நினைக்கிறேன். இதுதொடர்பாக அந்த குடும்பத்தின் மீது போலீசில் புகார் அளிக்க எண்ணி உள்ளேன். ஆனால் நான் சொல்வதை நக்ஷத்திர நம்ப மறுக்கிறார்' என கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
அவரது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.