லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
மலையாள நடிகரான துல்கர் சல்மான் தென்னிந்திய மொழிகளில் கன்னடம் தவிர மற்ற மூன்று மொழிகளிலும் சரிசமமாக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி பாலிவுட்டிலும் கால் பதித்து மூன்று படங்களில் நடித்துவிட்டார். அந்த வகையில் தெலுங்கில் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு வெளியான மகாநடி படத்தின் மூலம் உள்ளே நுழைந்த துல்கர் சல்மான் தற்போது சீதாராமம் என்கிற தனது இரண்டாவது தெலுங்கு படத்தில் நடித்து முடித்து விட்டார்.
இயக்குனர் ஹனு ராகவபுடி என்பவர் இயக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக மிருணாள் தாக்கூர் நடிக்க, முக்கியமான வேடத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படம் வரும் ஆகஸ்ட்-5 ஆம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த படத்தில் லெப்டினன்ட் ராம் என்கிற ராணுவ அதிகாரி கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார். போர் பதற்றம் நிறைந்த எல்லையில் இருக்கும் ஒரு ராணுவ வீரருக்கும் இளம் பெண்ணுக்கும் ஏற்படும் காதலை மையப்படுத்தி இந்தப்படம் உருவாகியுள்ளது