புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி | அமலாக்கத்துறை முன் விஜய் தேவரகொண்டா ஆஜர் | பிரமானந்தம் - யோகிபாபு சந்திப்பு ஏன்? | ஆந்திரா மதுபான ஊழல் ; விசாரணை வளையத்தில் நடிகை தமன்னா : கோலிவுட் போல் டோலிவுட்டும் கலக்கம் | 3 மணி நேரம் ஓடப் போகும் 'வார் 2' | வாழ்க்கை என்பது ஒரு வட்டம் ; ராஷி கண்ணாவின் புதிய மகிழ்ச்சி | ஸ்வேதா மேனன் மீது எப்ஐஆர் பதிவு ; நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட விடாமல் தடுக்கும் முயற்சியா? | நீங்க எனக்கு இன்ஸ்பிரேசன் : சிம்ரனை பாராட்டிய திரிஷா |
மோகன்லால் நடித்த திரிஷ்யம் படத்தை இயக்கி வெற்றிப்படமாக மாற்றியதுடன் அதன் இரண்டாம் பாகத்தையும் அதே அளவு விறுவிறுப்புடன் இயக்கு மீண்டும் ஒரு மிகப்பெரிய வெற்றியை மோகன்லாலுக்கு கொடுத்தார் இயக்குனர் ஜீத்து ஜோசப். திரிஷ்யம்-2 வெளியாகி முடிந்ததும் மீண்டும் மோகன்லாலை வைத்து டுவல்த் மேன் என்கிற புதிய படத்தை துவங்கிய ஜீத்து ஜோசப் அதையும் குறுகிய காலத்தில் முடித்தார். சமீபத்தில் நேரடியாக ஒடிடியில் வெளியான இந்தப்படம் வரவேற்பை பெற்றது.
மலையாள இளம் நடிகர் ஆசிப் அலி நடிக்கும் படத்தையும் இயக்கி வருகிறார் ஜீத்து ஜோசப்.. ஆனால் திரிஷ்யம்-2 படத்தை இயக்குவதற்கு முன்னதாக மோகன்லாலை வைத்து ராம் என்கிற படத்தை ஆரம்பித்த ஜீத்து ஜோசப் கொரோனா தாக்கம் காரணமாக அதன் படப்பிடிப்பை துவங்கிய சில நாட்களிலேயே நிறுத்திவிட்டார். அந்தப்படத்தின் மீதி படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடத்தப்பட இருந்தது தான் காரணம்.
இந்தநிலையில் டுவல்த் மேன் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ராம் படத்தின் படப்பிடிப்பை விரைவில் துவங்க இருப்பதாக கூறியுள்ளார் ஜீத்து ஜோசப். இந்தப்படத்தில் கதாநாயகியாக த்ரிஷா நடிக்கிறார் என்பதுடன், மோகன்லாலுடன் முதன்முறையாக இணைந்து நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.