ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
திரைப்படத் தயாரிப்பாளர் ஏக்நாத் மரணம் அடைந்தார். தயாரிப்பாளரும், 'ஏக்நாத் வீடியோஸ்' உரிமையாளருமான ஏக்நாத், 78. இவர் பாக்யராஜ் எழுதி இயக்கி நடித்த, பவுனு பவுனு தான் படத்தை தயாரித்திருந்தார். மேலும், வெள்ளையத் தேவன், மவுன மொழி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளார். கமல் நடித்த, இந்திரன் சந்திரன் படம் உள்பட பல படங்களை, 'டப்பிங்' செய்தும் வெளியிட்டுஉள்ளார்.
சென்னை அருகே திருமால்பூரில் வசித்து வந்தவர், சில மாதங்கள் உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு காலமானார்.இவருக்கு கவுரி என்ற மனைவியும், சுரேஷ் என்ற மகனும், அனுராதா என்ற மகளும் உள்ளனர். மகள் அமெரிக்காவில் உள்ளதால், அவர் வந்ததும், இறுதிச் சடங்குகள் நாளை திருமால்பூரில் நடக்க உள்ளன.