பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் வெளிவந்த படம் 'டான்'. இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நான்கு நாட்களில் இப்படம் 50 கோடி வசூலைப் பெற்றதாக கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள். படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து படக்குழுவினர் கேக் வெட்டி வெற்றியைக் கொண்டாடி உள்ளார்கள்.
நிகழ்வில் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி, சிவகார்த்திகேயன், எஸ்ஜே சூர்யா, ஷிவாங்கி, தயாரிப்பாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். 'டான்' படம் தெலுங்கில் 'காலேஜ் டான்' என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி உள்ளது. அங்கு சக்சஸ் மீட்டை இன்று நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
'டாக்டர்' படத்தைத் தொடர்ந்து 'டான்' படத்தையும் வெற்றிப் படமாகத் தந்துள்ளார் சிவகார்த்திகேயன். இதனால், அவருடைய அடுத்த படங்களுக்கான வியாபாரமும், எதிர்பார்ப்பும் அதிகமாகி உள்ளது.