லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
சாணிக்காகிதம், சர்க்காரு வாரி பாட்டா படங்களைத் தொடர்ந்து தமிழில் மாமன்னன் தெலுங்கில் தசரா, போலா சங்கர், மலையாளத்தில் வாசி ஆகிய படங்களில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். இந்த நிலையில் கிளாமர் குறித்த ஒரு கேள்விக்கு அவர் கூறுகையில், கிளாமர் வேடங்களில் நடிப்பதற்கு நான் ஒருபோதும் மறுத்ததில்லை. ஆனால் கிளாமர் குறித்து நான் சொன்னது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. கிளாமர் என்றால் அழகு. ஆனால் அதை கவர்ச்சி என்று மிகைப்படுத்திவிட்டோம். உடம்பை காண்பிக்கும் ஆடைகளை நான் அணிய மாட்டேன். என்னை அழகாக காட்டும் ஆடைகளையே அணிவேன். முக்கியமாக ஆடையுடன் கூடிய கிளாமரை வெளிப்படுத்துவேன் என்பதுதான் எனது கருத்தாக இருந்தது. கிளாமர் வேடம் என்பதற்காக ஆடை குறைத்து நடிப்பேன் என்று நான் ஒருபோதும் கூறியதில்லை என்று தெரிவித்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.