இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி | ‛ஹிருதயம் லோபலா' பாடல் நீக்கம் ஏன் ? : கிங்டம் தயாரிப்பாளர் புது விளக்கம் |
ஜுராசிக் பார்க் சகாப்தத்தின் இறுதிப்பகுதி இந்திய பார்வையாளர்களை வந்தடைந்து விட்டது. ஜூன் 10ம் தேதி வெளியாகும் ஜுராசிக் வேர்ல்ட் டாமினியன் திரைப்படதிற்கான முன்பதிவு, இந்தியாவின் ஒரு சில நகரங்களில், இப்போதே ஆரம்பித்துவிட்டது.
ரசிகர்கள் உற்சாகத்தை கூட்டவும், பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை தகர்க்கவும் வந்து விட்டது ஜுராசிக் வேர்ல்ட் டாமினியன். ஜுராசிக் வேர்ல்ட் படத்தொடரின் இறுதி பாகமாக வெளியாக இருக்கும் இந்த திரைப்படம் அனைத்து நாடுகளிலும் ரசிகர்களிடம் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பெரிய திரையில் இந்த காவிய அனுபவத்தை ரசிகர்கள் ரசிப்பது இதுவே கடைசி முறையாக இருக்கும் என்பதை அறிந்ததும், ரசிகர்கள் மத்தியில் உற்சாகம் மற்றும் எதிர்பார்ப்பு இதுவரை இல்லாத அளவு வானளாவ உயர்ந்துள்ளது. ஜூன் 10ம் தேதி ஆங்கிலம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளிவர உள்ள நிலையில் ரசிகர்கள் அனைவரும் படம் வெளியாகும் நாளுக்காக, நாட்களை எண்ணிக்கொண்டிக்கின்றனர்.
படம் வெளியாவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே இந்தியாவின் மும்பை, புனே, கோவா, ஆமதாபாத், டில்லி, சூரத், இந்தூர், ஹைதராபாத், பெங்களூர், சென்னை உட்பட 60 நகரங்கள் மற்றும் 228 திரைகளில் இப்போது முன்பதிவுகள் துவங்கப்பட்டிருக்கிறது. ஒரு மாதத்திற்கு முன்னரே முன்பதிவு ஆரம்பித்துள்ளதால் அரங்கம் நிறைந்து வசூல் சாதனை புரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.