நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படம் வரும் ஜூன் 3ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் ஒவ்வொரு வெளியீட்டு உரிமைகளையும் அழகாக வியாபாரம் பேசி முடித்து வருகிறார் கமல். இன்னொரு பக்கம் படத்தின் புரமோஷன் பணிகளும் துவங்கியுள்ளன. அதன் ஒரு கட்டமாக அனிருத் இசையில் கமல் தானே எழுதி பாடியுள்ள பத்தல பத்தல என்கிற பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி வரவேற்பையும், சர்ச்சையும் ஏற்படுத்தி உள்ளது.
சென்னை பாஷையில் கமல் பாடியுள்ள இந்த பாடல் கேட்க கேட்க ரசிக்க தூண்டும் என பலரும் கருத்து கூறி வருகிறார்கள். இந்த பாடலில் கமல் அணிந்திருந்த உடை குறித்து சோசியல் மீடியாவில் ஒரு புகைப்படம் ஒன்று வைரலாக பரவி வருகிறது. அதாவது அவர் அணிந்துள்ள சிவப்பு நிற சட்டையும் கிரீம் நிற டீசர்ட்டும் போலவே ஏற்கனவே தர்பார் படத்தில் ரஜினிகாந்த் அணிந்துள்ளார் என்றும், தனது ஆஸ்தான ஹீரோவான கமலுக்கு ரஜினிகாந்தின் ஆடையை அணிவித்து லோகேஷ் கனகராஜ் அழகு பார்த்திருக்கிறார் என்றும் கூட மீம்கள் சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளன.