'புஷ்பா 2' தியேட்டர் நெரிசல் விவகாரம்: மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் | தலைவன் தலைவி சக்சஸ் மீட் எப்போது | இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு வரும் அனுஷ்கா | முருகதாஸ், சிவகார்த்திகேயன் இரண்டு பேருக்கும் மதராஸி முக்கியம் | 'த காலர்' பிரிட்டிஷ் படத்தின் காப்பியா 'ஹவுஸ்மேட்ஸ்'? | 'ஐமேக்ஸ்' ரிலீஸ் இல்லாத 'கூலி': ரசிகர்கள் வருத்தம் | குழந்தைகளும் பார்க்கும் வகையிலான பேய்கதை | அரசியலில் இருந்து விலகிய பிறகும் விமர்சிக்கிறார்கள்: சிரஞ்சீவி பேச்சு | மதுரை மாநாடு நடப்பதென்ன... நடிகர், நடிகைகள் இணைகிறார்களா? | மூத்த நடிகையின் ஆசையை நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின் |
டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் படத்தையடுத்து விக்ரம் நடிப்பில் கோப்ரா என்ற படத்தை இயக்கி இருக்கிறார் அஜய் ஞானமுத்து. இப்படத்தில் விக்ரமுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, மியா ஜார்ஜ், கே .எஸ். ரவிக்குமார், இர்பான் பதான் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. அடுத்தபடியாக பா. ரஞ்சித் இயக்கும் தனது 61 ஆவது படத்தில் நடிக்கப் போகிறார் விக்ரம். இந்த படத்திற்கு மைதானம் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மைதானம் படத்தில் நடித்து முடித்ததும் அடுத்தபடியாக மீண்டும் கோப்ரா படத்தை இயக்கி உள்ள அஜய் ஞானமுத்து இயக்கும் படத்தில் விக்ரம் நடிக்க இருப்பதாக ஒரு புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதனால் கேப்ரா படம் வெளியானதும் அடுத்தபடியாக விக்ரமை வைத்து இயக்கும் அடுத்த படத்துக்கான கதை பணிகளை தொடங்கப்போகிறார் அஜய் ஞானமுத்து.