தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு | எந்த விதி மீறலும் இல்லை : தனுஷ் நோட்டீஸிற்கு நயன்தாரா பதில் | மீனாட்சி சவுத்ரி எடுத்த முடிவு | குடும்பமே இணைந்து தயாரிக்கும் 'பேமிலி படம்' | 'விடாமுயற்சி' டீசர்: அஜித் ரசிகர்களை மகிழ வைத்த மகிழ் திருமேனி | விஜய் ஆண்டனி குடும்பத்தில் இருந்து வரும் வாரிசு நடிகர் | மத உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி கேரள தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்ட துல்கர் நண்பரின் படம் | யோகி பாபு நடிக்கும் ‛பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே' |
தமிழ் சினிமாவில் தற்போதைக்கு மூன்று நடிகர்கள் தான் மிக அதிக சம்பளம் வாங்குவதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் மூவருமே 100 கோடி சம்பளத்தைக் கடந்துள்ளார்களாம்.
ரஜினிகாந்த், விஜய், அஜித் ஆகியோர்தான் அந்த மூவர். அவர்களில் ரஜினிகாந்த் அதிக பட்சமாக 120 கோடி சம்பளம் வாங்குகிறாராம். அவருக்கடுத்து விஜய் 110 கோடியும், அஜித் 100 கோடியும் சம்பளம் வாங்குவதாகச் சொல்கிறார்கள். மூவருக்குமே அடுத்து அவர்கள் நடிக்கும் படங்களின் சம்பளம் இதுதானாம். இதற்கு முன்னர் இதை விட சில பல கோடிகள் குறைவாக சம்பளம் வாங்கியவர்கள் புதிய படத்திற்காக சம்பளத்தை உயர்த்திவிட்டார்களாம்.
விஜய், அஜித்தை விடவும் ரஜினிகாந்த் அதிக சம்பளம் வாங்குவதுதான் ஆச்சரியம் என்கிறது கோலிவுட். கடந்த பல ஆண்டுகளாக வசூல் சக்கரவர்த்தியாக இருந்து வருகிறார் ரஜினிகாந்த். அவருடைய சூப்பர்ஸ்டார் பட்டத்திற்காக சில ஆண்டுகளுக்கு முன்பு விஜய், அஜித் இருவருமே ஆசைப்பட்டதாக பரபரப்பாக செய்திகள் வெளியாகின. அதன்பின் அந்த சர்ச்சை அப்படியே அமைதியாகிவிட்டது.
விஜய், 'இளைய தளபதி' என்பதிலிருந்து தன்னை 'தளபதி' ஆக பதவி உயர்வை செய்து கொண்டார். அஜித் தன்னை 'தல' என அழைக்க வேண்டாம், அஜித்குமார் அல்லது 'ஏகே' என அழைத்தால் போதும் என ரசிகர்களின் அன்பான பட்டத்தைத் துறந்தார்.
இவர்களுக்கு அடுத்தப்படியாக கமல்ஹாசன் - ரூ.50 கோடி, சிவகார்த்திகேயன் - ரூ.30 கோடி, சூர்யா - ரூ.25 கோடி, விஜய் சேதுபதி - ரூ.25, தனுஷ் - ரூ.25 கோடி, சிம்பு - ரூ.15 கோடி, விக்ரம் - ரூ.15 கோடி என சம்பளம் பெறுவதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.