வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
இயக்குனராக பல வெற்றிப் படங்களை கொடுத்த செல்வராகவன், தற்போது நடிகராகவும், அவரது திரைப் பயணத்தை விரிவுபடுத்தி உள்ளார். 'பீஸ்ட்' படத்தை அடுத்து, அவர் நடித்துள்ள 'சாணிக்காயிதம்' படம் ஓ.டி.டி.,யில் வெளியாகி உள்ளது. அவர் நம் நாளிதழுக்கு அவர் அளித்த மினிபேட்டி: 'சாணிக்காயிதம்' கதை ரொம்ப வித்தியாசமா இருந்துச்சு. ஏன், நாம நடிக்கக்கூடாதுனு நினைச்சேன். 'சாணிக்காயிதம்' டீமை, வெறிப்பிடிச்ச 'டீம்!' வேலையை தவிர எதுவும் யோசிக்காம, ஓடிட்டே இருந்தாங்க; எனக்கு நல்ல அனுபவமா இருந்துச்சு.
நடிக்க போகும்போது, இயக்குனர் செல்வராகவனை மூட்டை கட்டி வைச்சுட்டு, நடிகரா மட்டுமே போனேன். நிறைய விஷயம் கத்துக்கிட்டேன்; இன்னும் நிறைய கத்துக்கணும். 'செட்'டுல, கீர்த்தியின் நடிப்பை நிறைய முறை வேடிக்கை பார்த்தேன். திறமையான நடிகை. கதை அமைஞ்சால், தனுஷுடன் இணைந்து நடிப்பேன். மீண்டும், '7 ஜி ரெயின்போ காலனி' மாதிரியான படங்களை இயக்கலாம்.
'நானே வருவேன்' படத்தின் படப்பிடிப்பு முடிஞ்சு, இறுதி கட்ட வேலை நடந்துட்டு இருக்கு. எதிர்கால திட்டம் எல்லாருக்கும் இருக்கும். சினிமாவில் பக்குவம் வரும்போது, இன்றைய நாளை தவிர பெரிய சிந்தனை எல்லாம் இருக்காது. இப்ப செய்ற வேலையை சரியாக செஞ்சா போதும்னு நினைக்கிறேன். என் படத்திலேயே 'ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை' இரண்டாம் பாகங்களை எடுக்கலாம். அதுக்கான களம், நேரம் அமையணும் என்றார்.