அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
இயக்குநர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் “ரத்தம்”. கமல் போஹ்ரா, லலிதா தனஞ்செயன், பிரதீப் மற்றும் பங்கஜ் போஹ்ரா ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர். மாஸ் பொழுதுபோக்கு படமாக உருவாகிவரும் இந்த படத்தில் மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். ஜெகன், நிழல்கள் ரவி, ஜான் மகேந்திரன், கலை ராணி, மகேஷ் , சுந்தர், மீஷா கோஷல் மற்றும் அமேயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
நடிகர் விஜய் ஆண்டனி இதே தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து, 'கொலை' மற்றும் 'மழை பிடிக்காத மனிதன்' என்ற மேலும் இரண்டு படங்களில் பணியாற்றி வருகிறார். அப்படங்கள் தயாரிப்பின் வெவ்வேறு கட்டங்களில் உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டப்பிங் பணிகள் இன்று சென்னையில் எளிமையான பூஜையுடன் இனிதே தொடங்கியது. விஜய் ஆண்டனி தனது டப்பிங் பணிகளை செய்துவரும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.