ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
தமிழில் நேரம் படத்தில் அறிமுகமான மலையாள நடிகை நஸ்ரியா, அதன் பிறகு ராஜா ராணி, வாயை மூடி பேசவும், நய்யாண்டி என பல படங்கள் நடித்தார். பகத் பாசிலை திருமணம் செய்து கொண்ட பிறகு சில காலம் சினிமாவை விட்டு விலகி இருந்தவர் பின்னர் மலையாள படங்களில் நடித்து வந்தார். தற்போது தெலுங்கில் நானி நடித்துள்ள அன்டி சுந்தரானிகி என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்தப் படம் தமிழில் அடடே சுந்தரரா என்ற பெயரில் வெளியாகிறது. இப்படத்தில் முஸ்லீம் பெண்ணான நீங்கள் லீலா தாமஸ் என்ற ஒரு கிறிஸ்தவ பெண் வேடத்தில் நடித்திருப்பது ஏன்? என்று அப்படத்தின் பிரஸ்மீட்டில் நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு இந்த படத்தில் கிறிஸ்தவ பெண்ணாக நான் இந்து ஆணுக்கு மனைவியாகும் வேடத்தில் நடித்துள்ளேன். இந்த படத்தின் கதையும் எனது கேரக்டரும் ரொம்ப பிடித்திருந்தது. அதில் ஒரு ஸ்பார்க் இருந்தது. அதனால் தான் ஒப்புக்கொண்டேன். மற்றபடி முஸ்லிம் பெண் கிறிஸ்தவ பெண் வேடத்தில் நடிக்க கூடாது என்பதெல்லாம் இல்லை. கதை பிடித்திருந்தால் எந்த மாதிரி வேடத்திலும் யாரும் நடிக்கலாம் என்றும் ஒரு பதில் கொடுத்திருக்கிறார் நஸ்ரியா.