சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

விஜய் நடித்த பீஸ்ட் படம் வெளியாவதற்கு முன்பே கடந்த மாதம் அந்த படத்தில் இருந்து வெளியான அரபிக்குத்து என்கிற பாடல் பட்டி தொட்டியெல்லாம் ஒலிக்கும் அளவிற்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ரசிகர்கள் மட்டுமல்லாது திரையுலக பிரபலங்களும் சில கிரிக்கெட் வீரர்களும் கூட அந்த பாடலுக்கு நடனமாடி அந்த வீடியோக்களை சோசியல் மீடியாவில் வெளியிட அவையும் வைரலான நிகழ்வுகளும் நடந்தது.
இந்த நிலையில் பிரேமம் புகழ் நடிகை அனுபமா பரமேஸ்வரன் அரபிக்குத்து பாடலுக்கு நடனமாடி அந்த வீடியோவை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதற்கு ஒரு மில்லியனுக்கு அதிகமான லைக்குகள் கிடைத்துள்ளன. சமீபத்தில் சித்திரை விஷு கொண்டாட்டமாக கேரளாவின் பாரம்பரிய உடையை அணிந்து கைகளில் மலர்களை வைத்தபடி இந்த பாடலுக்கு ஆடியுள்ள அனுபமா பரமேஸ்வரன், விஷு சத்யா உற்சாக கொண்டாட்டத்தில் ஒரு சிறு பகுதியாக இந்த பாடலுக்கு ஆடியதாக கூறியுள்ளார்.