ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'தி வாரியர்'. ராம் பொத்தினேனி இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் முக்கிய கதாபத்திரங்களில் ஆதி, நாசர், நதியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து வருகின்றனர்.
தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். இப்படம் வருகின்ற ஜூலை 14-ஆம் தேதி திரைக்கு வருகிறது .
இந்நிலையில் இப்படத்தில் நடிகர் சிம்பு ஒரு பாடலை பாடியுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு என மொழிகளில் அந்த பாடலை சிம்பு பாடியுள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்ற இந்த பாடல் பதிவின் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது .