'புஷ்பா 2' தியேட்டர் நெரிசல் விவகாரம்: மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் | தலைவன் தலைவி சக்சஸ் மீட் எப்போது | இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு வரும் அனுஷ்கா | முருகதாஸ், சிவகார்த்திகேயன் இரண்டு பேருக்கும் மதராஸி முக்கியம் | 'த காலர்' பிரிட்டிஷ் படத்தின் காப்பியா 'ஹவுஸ்மேட்ஸ்'? | 'ஐமேக்ஸ்' ரிலீஸ் இல்லாத 'கூலி': ரசிகர்கள் வருத்தம் | குழந்தைகளும் பார்க்கும் வகையிலான பேய்கதை | அரசியலில் இருந்து விலகிய பிறகும் விமர்சிக்கிறார்கள்: சிரஞ்சீவி பேச்சு | மதுரை மாநாடு நடப்பதென்ன... நடிகர், நடிகைகள் இணைகிறார்களா? | மூத்த நடிகையின் ஆசையை நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின் |
மகாநடி படத்தை தொடர்ந்து தெலுங்கில் மீண்டும் நேரடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார் துல்கர் சல்மான். ஹனு ராகவபுடி இயக்கும் இந்த படம் தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மும்மொழிகளில் தயாராகிறது. 1964-ம் ஆண்டில் ராணுவ பின்னணியில் நடைபெறும் வகையில் அதேசமயம் ஒரு பீரியட் காதல் கதையாக உருவாகிறது..
இந்தப்படத்தில் லெப்டினென்ட் ராம் என்கிற ராணுவ அதிகாரியாக துல்கர் சல்மான் நடிக்கிறார் என்பதால் லெப்டினன்ட் ராம் என்றே தற்காலிக டைட்டில் வைத்து அழைத்து வந்தார்கள்.. இந்தநிலையில் ராமநவமியை முன்னிட்டு இந்தப்படத்திற்கு சீதா ராமம் என டைட்டில் சூட்டப்பட்டு போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
துல்கர் சல்மானுக்கு ஜோடியாக சூப்பர் 60, பட்லா ஹவுஸ் ஆகிய படங்களில் நடித்த பாலிவுட் நடிகை மிருணாள் தாக்கூர் நடிக்கிறார்.. இன்னொரு முக்கிய வேடத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனாவும் நடித்து வருகிறார் என்கிற அதிகாரப்பூர்வமான செய்தியும் சமீபத்தில் வெளியானது