மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இந்தியத் திரைப்படங்கள் அமெரிக்காவில் 100 கோடி ரூபாய் வசூலைக் கடப்பது மாபெரும் சாதனை. அந்த சாதனையை ராஜமவுலி மீண்டும் செய்திருக்கிறார்.
அவரது இயக்கத்தில் 2017ல் வெளிவந்த 'பாகுபலி 2' படம் 100 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை புரிந்தது. அப்போது அந்தப் படம் யுஎஸ் டாலர் மதிப்பில் சுமார் 20 மில்லியன் வசூலித்தது. அந்த சமயத்தில் யுஎஸ் டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு 65 ரூபாயாக இருந்தது.
இப்போது 'ஆர்ஆர்ஆர்' படம் 100 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் கடந்த 15 நாட்களில் சுமார் 13.5 மில்லியன் யுஎஸ் டாலரை இப்படம் வசூலித்துள்ளது. இப்போது யுஎஸ் டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு 75 ரூபாயாக உள்ளது.
அமெரிக்காவில் 100 கோடி வசூலைக் கடந்த இந்தியப் படங்களில் முதலிரண்டு இடங்களையும் ராஜமவுலி இயக்கிய படங்களே இடம் பெற்றுள்ளன. அதற்கடுத்து 3வது இடத்தில் 2016ல் ஆமீர்கான் நடித்து வெளிவந்த 'டங்கல்', 4வது இடத்தில் ரன்வீர் சிங், தீபிகா படுகோனே நடித்த 2018ம் ஆண்டு வெளிவந்த 'பத்மாவத்', 5வது இடத்தில் ஆமீர்கான் நடிப்பில் 2014ல் வெளிவந்த 'பிகே' ஆகிய படங்கள் உள்ளன.