நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், அபர்ணாதாஸ், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‛பீஸ்ட்'. அனிருத் இசையமைத்துள்ளார். ஏற்கனவே படத்திலிருந்து இரு பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன. சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்த படம் வரும் ஏப்ரல் 13ம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்திய படமாக உலகம் முழுக்க வெளியாக உள்ளது.
படத்தில் முஸ்லிம்களை பயங்கரவாதிகள் போன்று சித்தரித்து இருப்பதாலும், நிறைய வன்முறை காட்சிகள் இருப்பதாலும் அரபு நாடான குவைத்தில் பீஸ்ட் படத்திற்கு தடை விதிக்கப்பட்டது. குவைத்தில் இதே காரணத்துக்காக துல்கர் சல்மானின் குரூப், விஷ்ணு விஷாலின் எப்.ஐ.ஆர் படங்களும் தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், குவைத்தை தொடர்ந்து கத்தாரிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குவைத், கத்தார் என அடுத்தடுத்து அரபு நாடுகளில் பீஸ்ட் படத்திற்கு தடை விதிக்கப்பட்டு வருவதால் இது படத்தின் வசூலை பாதிக்குமோ என அச்சம் ஏற்பட்டுள்ளது. அதே சமயம் அரபு நாடுகளில் மிகக்குறைவான அளவே வசூல் கிடைப்பதால், இது பீஸ்ட் படத்தின் வசூல் பெரிய அளவில் பாதிக்கப்படாது எனவும் கூறப்படுகிறது.