மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பான்-இந்தியா படங்கள் என்ற மிகப் பெரிய வட்டத்திற்குள் தெலுங்கு ஹீரோக்கள் சிலரும், கன்னடத்திலிருந்து ஒருவரும் சென்று விட்டார்கள். தெலுங்கில் பிரபாஸ், அல்லு அர்ஜுன், ஜுனியர் என்டிஆர், ராம்சரண், கன்னடத்திலிருந்து யஷ் ஆகியோர் இந்திய அளவில் பிரபலமாகியுள்ள தென்னிந்திய ஹீரோக்களாக முன்னிலை வகிக்கிறார்கள்.
ஆனால், தமிழில் தங்களது படங்களை பான்-இந்தியா படங்களாக வெளியிட ஆசைப்படும் ஹீரோக்களில் அஜித், விஜய் முக்கியமானவர்கள். அஜித் அவர் நடிக்கும் தமிழ்ப் படங்களின் பிரமோஷன்களுக்கே வர மாட்டார். அதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறார். விஜய் தமிழில் மட்டும் அவரது பட விழாக்களில், அதுவும் இசை வெளியீட்டில் மட்டுமே கலந்து கொள்வார்.
விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்' படம் தமிழைத் தவிர தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் ஆகி வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்காக இசை வெளியீட்டு விழாவையும் நடத்தவில்லை. ஆனால், ஒரே ஒரு டிவி பேட்டி மட்டுமே தந்துள்ளார் விஜய்.
'பீஸ்ட்' படத்துடன் போட்டி போட்டு முன்பதிவில் முந்திக் கொண்டிருக்கும் படமாக கன்னடப் படமான 'கேஜிஎப் 2' இருக்கிறது. இந்தப் படத்தில் நடித்துள்ள யஷ் பிரமோஷனுக்காக ஊர் ஊராக சுற்றிக் கொண்டிருக்கிறார். டில்லி, மும்பை, சென்னை, கொச்சி என சென்றுவிட்டார். அடுத்து இன்னும் சில ஊர்களுக்கு செல்லவிருக்கிறார்.
யஷ் இப்படி சுற்றிக் கொண்டிருக்க 'பீஸ்ட்' படத்தில் நடித்துள்ள விஜய் வீட்டை விட்டு வெளியே வரவில்லையே ஏன் மற்ற மொழிகளில் உள்ள ஊடகத்தினர் கேள்வி எழுப்புகிறார்கள். பான்-இந்தியா படமாக வெளியிட்டால் மட்டும் போதாது அதற்கேற்றபடி இந்தியா முழுவதும் சுற்றி தங்களது படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என அவர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.