அடுத்த படம் எது? அல்லாடும் டாப் ஹீரோக்கள் | டைட்டில் இல்லாமலேயே முடிந்த விமல் படம் | யானை நடிக்கும் புதிய படம் ‛அழகர் யானை' | ஏஐ தொழில்நுட்பம் சினிமா கலைஞர்களை அழித்துவிடும்: அனுராக் காஷ்யப் எச்சரிக்கை | தயாரிப்பு நிறுவனம் துவக்கம்: திருப்பதியில் கெனிஷாவுடன் ரவிமோகன் சாமி தரிசனம் | பிளாஷ்பேக்: ஒரே படத்தில் போலீஸ் அதிகாரிகளாக நடித்த சிவாஜியும், பிரபுவும் | பிளாஷ்பேக்: மாப்பிள்ளையை வெற்றி பெற வைத்த சர்க்கஸ் காட்சிகள் | அட்லி - அல்லு அர்ஜுன் படத்தில், 'பகிரக்கூடாத ஒப்பந்தம்' | 500 கோடி வசூலில் 'கூலி' | சச்சின் டெண்டுல்கர் ரசித்துப் பார்த்த '3பிஹெச்கே' |
தென்னிந்தியத் திரையுலகத்திலிருந்து அடுத்தடுத்து இரண்டு பிரம்மாண்டப் படங்கள் இந்தித் திரையுலகத்தை மிரள வைக்கின்றன. ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம்சரண் மற்றும் பலர் நடித்து கடந்த மாதம் வெளிவந்த 'ஆர்ஆர்ஆர்' படம் ஹிந்தியில் 200 கோடியையும் உலக அளவில் 1000 கோடி வசூலையும் கடந்துள்ளது.
அதற்கடுத்து அடுத்த வாரம் ஏப்ரல் 14ம் தேதி பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நாயகனாக நடித்துள்ள 'கேஜிஎப் சாப்டர் 2' படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்கான முன்பதிவு இந்திய மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் புதிய சாதனையைப் படைத்துள்ளதாக பாலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மூன்று வருடங்களில் மிகச் சிறப்பான முன்பதிவு இது என சொல்கிறார்கள். மேலும் 'ஆர்ஆர்ஆர்' படம் முன்பதிவில் படைத்த சாதனையை சில மணி நேரங்களிலேயே 'கேஜிஎப் 2' முறியடித்துவிட்டதாம்.
இதுவரையில் 'பாகுபலி 2' படம் தான் முன்பதிவின் மூலமாக மட்டுமே 35 கோடி ரூபாய் வசூலைப் பெற்று முதலிடத்தில் உள்ளது. இந்த சாதனையை 'ஆர்ஆர்ஆர்' படம் கூட முறியடிக்கவில்லை. 'கேஜிஎப் 2' படத்தில் ஹிந்தி நடிகரான சஞ்சதய் தத், ஹிந்தி நடிகையான ரவீனா டாண்டன் ஆகியோர் நடித்திருப்பது கூடுதல் பலமாகப் பார்க்கப்படுகிறது.
'கேஜிஎப் 2' படத்தின் முதல் நாள் வசூல் மிக அதிகமாக இருக்கும் என பாலிவுட் வட்டாரங்களில் எதிர்பார்க்கிறார்கள்.