பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
கேஜிஎப் படம் மூலம் தமிழகத்திலும் ரசிகர்களைப் பெற்றவர் கன்னட நடிகரான யஷ். அவரது நடிப்பில் 'கேஜிஎப் 2' படம் அடுத்த வாரம் ஏப்ரல் 14ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைபெற்றது.
இது பற்றி கேள்விப்பட்ட யஷ் ரசிகர்கள் நேற்று அந்த ஓட்டல் இருக்கும் தெரு முன் திரண்டு நின்றனர். நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்ட நிலையில் அவர்களை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்திவிட்டார்களாம். இது பற்றி கேள்விப்பட்ட யஷ் உடனே ஓட்டல் நிர்வாகத்தினரிடம் பேசி சிறப்பு அனுமதி பெற்று, அந்த ரசிகர்களை ஓட்டலின் போர்ட்டிகோவுக்கு வரவழைத்திருக்கிறார்.
அங்கு ரசிகர்களை வரிசையில் நிற்க வைத்து ஒவ்வொருவருடனும் தனித்தனியே புகைப்படம் எடுத்து அவர்களுக்கு நன்றி சொல்லி அனுப்பி வைத்திருக்கிறார். இந்த திடீர் நிகழ்வால் பத்திரிகையாளர் சந்திப்பு ஆரம்பமாவதும் தாமதமாகி இருக்கிறது.
தமிழில் உள்ள டாப் ஹீரோக்கள் பொதுவாக அவர்களது திரைப்பட விழாக்களுக்கு அதிகம் வருவதில்லை. அப்படியே வந்தாலும் அவர்களைச் சுற்றி பத்து, பதினைந்து பாதுகாவலர்களுடன் வந்து தங்களை யாரும் நெருங்காமல் பார்த்துக் கொள்வார்கள்.