சிம்புவின் 50வது படம் டிராப்பா? | ரசிகர்கள் விரும்பும் படத்தை கொடுக்கவில்லை: 'தக் லைப்' தோல்விக்கு மன்னிப்பு கேட்ட மணிரத்னம் | ஆக் ஷன் ஹீரோக்கள் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : கஜோல் | 'கேம் சேஞ்ஜர்' படத்துக்கு பச்சைக்கொடி காட்டியிருக்க கூடாது: தயாரிப்பாளர் தில் ராஜூ புலம்பல் | தமிழ்த் தலைப்புகளும், ஆங்கிலத் தலைப்புகளும் மோதும் ஜுன் 27 ரிலீஸ் | மாலத்தீவில் குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய காஜல் அகர்வால் | மீண்டும் வெளியாகும் 'சேது' | அன்னை இல்ல வழக்கு தள்ளுபடி: சிவாஜி குடும்பம் நிம்மதி | வடிவேலு வழக்கில், சிங்கமுத்துவுக்கு 2500 ரூபாய் அபராதம் | சின்மயி கணவர் இயக்குனர், நடிகர் ராகுல் பிறந்தநாள் : ரஷ்மிகா வாழ்த்து |
சமந்தா கதாநாயகியாக நடித்து வரும் படம் யசோதா. இந்தப்படம் ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. ஹரி சங்கர் மற்றும் ஹரி நாராயன் ஆகியோர் இயக்கி வரும் இந்தப் படத்தில் சமந்தாவுடன் வரலட்சுமி, உன்னி முகுந்தன், சம்பத் ராஜ் உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்க மணிசர்மா இசையமைக்கிறார், இப்படம் ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த யசோதா படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு கொடைக்கானல் மலை உச்சியில் நடைபெற்றுள்ளது. படப்பிடிப்பு முடிந்து திரும்பும் நேரத்தில் படக்குழுவினருடன் இணைந்து ஒரு அதிரடி நடனமாடியிருக்கிறார் வரலட்சுமி. அதுகுறித்த ஒரு வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலானது.