ஸ்லிம்மாக இருக்க ஊசியா : தமன்னா பதில் | நலமாக இருக்கிறேன் : மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கோவிந்தா | நலமுடன் வீடு திரும்பினார் தர்மேந்திரா | 'கும்கி- 2' படத்திற்கு இடைக்கால தடை போட்ட சென்னை உயர்நீதிமன்றம்! | 'டியூட்' படத்தை அடுத்து ஓடிடிக்கு வரும் 'பைசன்' | ரஜினியின் 'ஜெயிலர்- 2' படத்தில் இணைந்த மேக்னா ராஜ்! | அருள்நிதி, மம்தா மோகன்தாஸ் நடிக்கும் ‛மை டியர் சிஸ்டர்' | விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ‛ஜெய்பீம்' நடிகை | பாடல் வரிகள், டியூன் தானாக வந்தது, எல்லாம் அவன் செயல் : சத்ய சாய்பாபா பாடல் குறித்து தேவா நெகிழ்ச்சி | ஏ.ஆர் ரஹ்மானுடன் ஜானி மாஸ்டர் புகைப்படம் : சர்ச்சை கேள்விகளுக்கு சின்மயி பதிலடி |

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிக்கும் 'பீஸ்ட்' படம் ஐந்து மொழிகளில் வெளியாகிறது. இதுவரையில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் டிரைலர்களை வெளியிட்டுள்ளார்கள். ஹிந்தி டிரைலர் நேற்று முன் தினம் யூ டியூபில் இரண்டு சேனல்களில் வெளியானது. ஒன்றில் 18 லட்சம் பார்வைகளும், மற்றொன்றில் 35 லட்சம் பார்வைகளும் கிடைத்துள்ளது. தெலுங்கு டிரைலர் நேற்று வெளியானது. இதற்கு 27 லட்சம் பார்வைகள் கிடைத்துள்ளது.
இதற்கு முன்பு விஜய் நடித்து வெளிவந்த 'மாஸ்டர்' டிரைலர் ஹிந்தியில் மூன்று யு டியூப் சேனல்களில் 1 கோடியே 25 லட்சம் பார்வைகளையும், தெலுங்கில் 84 லட்சம் பார்வைகளையும் பெற்றுள்ளது. இந்த சாதனைகளை 'பீஸ்ட்' முறியடிக்குமா என்பது இனிமேல்தான் தெரியும்.
ஐந்து மொழிகளில் வெளியாக உள்ள 'பீஸ்ட்' படத்தின் டிரைலரை தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் மட்டும்தான் இதுவரை வெளியிட்டுள்ளனர். கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இதுவரையிலும் வெளியிடவில்லை.