'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. | ஆடை வடிவமைப்பாளரை 2வது திருமணம் செய்த மாதம்பட்டி ரங்கராஜ் |
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒரியா, பெங்காலி உட்பட பல மொழிகளில் 600 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் சரண்ராஜ். ஒரு சிறு இடைவேளைக்கு பிறகு தற்போது தனது இளைய மகன் தேவ் சரண்ராஜ் நடிக்க புதிய படம் ஒன்றை அவரே இயக்குகிறார். ஏற்கனவே இவர் ஓரிரு படங்கள் இயக்கி உள்ளார்.
படத்தை சோனி ஸ்ரீ புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கிறது. பைலட்டாக பணியாற்றிய அந்த பணியை விட்டுவிட்டு, நடிப்பு கல்லூரியில் சிறப்பு பயிற்சி எடுத்து கொண்டு, இப்படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார்.
படம் பற்றி இயக்குனர் சரண்ராஜ் கூறியதாவது: ஒரு குப்பத்தில், மீனவ இளைஞனுக்கும் மார்வாடி பெண்ணுக்கும் நடக்கும் காதல் கதை தான் இந்தப்படம். இப்படத்தில் இரண்டு காதல் ஜோடிகள் நடிக்கவுள்ளனர். தேவ் சரண்ராஜ், சுஷ்மிதா சுரேஷ் முதன்மை ஜோடியாக நடிக்க, ஆதி தேவ் மற்றும் பிரியதர்ஷினி அருணாசலம் இன்னொரு ஜோடியாக நடிக்கின்றனர்.
சென்னை பாலவாக்கம் பகுதியில் தொடர்ந்து 45 நாட்கள் ஒரே கட்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து சென்னை, ஏலகிரி, ஆந்திரா ஆகிய பகுதிகளிலும் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் பற்றிய விபரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். என்றார்.