ஜன.3ல் 'பராசக்தி' பாடல் வெளியீட்டு விழா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | புகையிலை விளம்பரத்திற்கு ரூ.40 கோடி: தைரியமாக மறுத்த சுனில் ஷெட்டி | ‛பருத்திவீரன்' புகழ் பாடகி லட்சுமி அம்மாள் காலமானார் | 2026லாவது அஜித் படம் வருமா | அண்ணா சாலை இரும்பு பாலத்திற்கு சிவாஜி பெயர் : ரசிகர்கள் வேண்டுகோள் | 2025ல் தமிழ் சினிமாவில் மறைந்த திரைப்பிரபலங்கள் | ஜனவரி 16ல் ஜூலிக்கு திருமணம்: பல வருட காதலரை மணக்கிறார் | திடீரென மேலாளரை நீக்கிய விஷால் | பிளாஷ்பேக்: பாடல்கள் இல்லாத 'வண்ணக் கனவுகள்' | பிளாஷ்பேக் : ஜெமினி கணேசனுக்கு வில்லனாக நடித்த சிவாஜி கணேசன் |

விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள 'பீஸ்ட்' படம் ஏப்ரல் 13ம் தேதி ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகிறது. விஜய் படங்களைப் பொறுத்தவரையில் இதுவரை இல்லாத அளவிற்கு இந்தப் படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாம். இருந்தாலும் ஏப்ரல் 14ம் தேதி வெளியாகும் 'கேஜிஎப் சேப்டர் 2' படத்தின் காரணமாக சில பல தடங்கல்களை சந்திக்க வேண்டி இருக்கிறதாம்.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் 'கேஜிஎப் 2' படத்திற்கான தியேட்டர் ஒப்பந்தங்களை எப்போதோ முடித்துவிட்டிருக்கிறார்கள். 'பீஸ்ட்' படம் பற்றிய வெளியீட்டு முடிவை கடந்த மாதம் தான் முடிவு செய்தார்கள். இருப்பினும் எந்தத் தியேட்டர்கள் எல்லாம் கிடைக்கிறதோ அவை அனைத்திலும் படத்தை வெளியிட ஒப்பந்தங்களைப் போட்டு வருகிறார்களாம். இன்னும் ஓரிரு நாட்களில் இவை அனைத்தையும் முடிந்துவிடும் எனத் தெரிகிறது.
தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் 'பீஸ்ட்' படத்திற்கு 'கேஜிஎப் 2' படத்தை விடவும் அதிக வரவேற்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, வட இந்தியா ஆகியவற்றில் 'கேஜிஎப் 2' முந்திக் கொள்ளும் என்கிறார்கள்.




