ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
வலிமை படத்திற்கு பிறகு அஜித்தின் 61வது படம் விரைவில் தொடங்க இருக்கிறது. வலிமை படத்தின் தாமதம், படப்பிடிப்பில் நடந்த விபத்து, படம் பற்றிய இருவித விமர்சனம் என வலிமை அஜித்துக்கு கொஞ்சம் வலி தந்த படமாகத்தான் அமைந்தது. அதோடு அஜித்துக்கு இதுவரை 7 ஆபரேஷன்கள் வரை நடந்துள்ளது.
இவற்றை கருத்தில் கொண்டும், 61வது படம் எந்த சிக்கலும் இன்றி நிறைவடைய வேண்டும், மிகப்பெரிய வெற்றியடைய வேண்டும் என்று மனைவி ஷாலினியின் வேண்டுதல்படியும் அஜித் பாலக்காடு கல்பாத்தி விஸ்வநாதர் ஆலயத்துக்கு சென்று வழிபாடு நடத்தினார். இது குறித்து படங்கள் இணையதளத்தில் வெளியானது.
ஆனால் இந்த வழிபாட்டுக்கு முன்னதாக அஜித் 15 நாட்கள் வரை பாலக்காடு பகுதியில் உள்ள பிரபலமான ஆயுர்வேத சிகிச்சை மையம் ஒன்றில் தங்கியிருந்து இயற்கை வைத்தியம் செய்திருக்கிறார் என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த மையத்தில் சிகிச்சை பெறுகிறவர்கள் கடைசி நாளில் கல்பாத்தி விஸ்வநாதர் கோவிலில் வழிபடுவது வழக்கம் என்றும் கூறப்படுகிறது.