சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

‛அட்டு' படத்தின் இயக்குநர் ரத்தன் லிங்காவின் அடுத்த படம் லாக். பேம்பூ ட்ரீஸ் சினிமாஸ், சக்திவேல் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்தில் நாயகனாக சுதிர், நாயகியாக மது நடிக்க, இரண்டாவது நாயகியாக ஹரிணி நடிக்கிறார். இவர்கள் தவிர நடன இயக்குநர் பாரதி, சீனிவாச வரதன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். நந்தா ஒளிப்பதிவு செய்துள்ளார், விக்ரம் செல்வா இசை அமைத்துள்ளார்.
படம் பற்றி ரத்தன் லிங்கா கூறியதாவது : இந்த உலகில் வாழும் ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு கனவு உண்டு. அதை நோக்கிய பயணத்தையே அவர்கள் வாழ்க்கையாக வாழ்கிறார்கள். சிலருக்கு அந்தக் கனவுகள் பலிக்கின்றன. சிலருக்குப் பாதிதான் நிறைவேறுகின்றன. சிலருக்குக் கனவுகள் தொடக்கத்திலேயே கருகிப் போய் விடுகின்றன.
இந்த சமுதாயத்தில் நாம் பழகும் மனிதர்கள் நல்லவர்களா ?கெட்டவர்களா? என்பதை நாம் தான் கண்டறிய வேண்டும். ஏனெனில் இந்த உலகில் நம்மை நாம் தான் காப்பாற்றிக் கொள்ள முடியும். இல்லாவிட்டால் அதற்கு உண்டான விளைவுகளை நாம் அனுபவித்தே தீர வேண்டும். இதுவே 'லாக் ' படத்தின் கரு. சமூக விரோதிகளும் தீயசக்திகளும் மனிதர்களின் கனவில் கனலை மூட்டி விடுகிறார்கள். கனவு பூவாக மலரும் முன்பே மிதித்துச் சிதைத்து விடுகிறார்கள்.
அந்த நகரத்தில் சைக்கோ காமக் கொடூர கொலைகாரர்கள் ஐந்து பேர் ஊடுருவுகிறார்கள். அடுத்து தங்கள் காமப்பசிக்காக ஜூலி மீது கண் வைக்கிறார்கள். மிருகங்களின் கொடூர கரங்களிலிருந்து எப்படி ஜூலி தப்பிக்கிறாள்? சைக்கோ கொலையாளிகள் என்ன ஆனார்கள்? என்பதைப் பரபரப்பாக சொல்லும் படம்தான் லாக் என்றார்.