டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி | 'மிஸ்டர்.பாரத்' படப்பிடிப்பு நிறைவு : லோகேஷ் கனகராஜ் நேரில் வாழ்த்து | நிவின் பாலி மீது பணமோசடி வழக்கு | ஒரு வருடத்திற்கு முன்பே விற்றுத் தீர்ந்த டிக்கெட்டுகள்: கிறிஸ்டோபர் நோலன் புதிய சாதனை | பிளாஷ்பேக்: பாலிவுட்டில் வில்லனாக அறிமுகமான தியாகராஜன் | பிளாஷ்பேக் : நாட்டியத்தால் சினிமாவை இழந்த பி.கே.சரஸ்வதி | தலைவன் தலைவி Vs மாரீசன் - அடுத்த வாரப் போட்டி…! | இந்தியாவில் வசூலை அள்ளும் 'எப் 1, ஜூராசிக் வேர்ல்டு, சூப்பர் மேன்' | அனல் காற்று, தூசு, கொப்பளங்கள்... : 'மோனிகா' அனுபவம் பகிர்ந்த பூஜா | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் |
ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், நடிப்பில் வெளியாகியுள்ள ஆர் ஆர் ஆர் திரைப்படம் பாசிட்டிவான விமர்சனங்களுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ராம் சரணின் மனைவியான உபசனா ஆர் ஆர் ஆர் படத்தை திரையரங்கில் தான் பார்த்து ரசித்த வீடியோக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டிருந்தார். அதோடு நேற்று ஜூனியர் என்டிஆரின் மனைவி லட்சுமி பிரனதி நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். அதையடுத்து அவருக்கு ராம் சரணின் மனைவி உபசனா ஒரு பிறந்தநாள் வாழ்த்து செய்தி வெளியிட்டார். அந்த செய்தியில், ஆர் ஆர் ஆர் படத்தின் வெற்றியோடு சேர்த்து மகிழ்ச்சியாக கொண்டாடி வரும் உங்களது பிறந்தநாளுக்கு எனது வாழ்த்துக்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ராம் சரணுக்கு இன்று 38 ஆவது பிறந்த நாள் ஆகும். அவரது பிறந்தநாளுக்கு ராஜமவுலி, ஜூனியர் என்டிஆர் உள்பட பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். ஆர்ஆர்ஆர் படத்தின் வரவேற்புடன் ராம் சரணின் பிறந்தநாளையும் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.