'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியாகியுள்ள ஆர்ஆர்ஆர் திரைப்படம் ரசிகர்களை மட்டுமல்லாமல் ஒரு பார்வையாளராக திரையுலக பிரபலங்களையும் பிரமிக்க வைத்துள்ளது. பலரும் முதல் நாளன்றே இந்த படத்தை பார்த்துவிட்டு தங்களது வியப்பை விதவிதமான வார்த்தைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். அந்தவகையில் நடிகர் மகேஷ்பாபுவும் ஆர்ஆர்ஆர் படத்தை பார்த்துவிட்டு இது ஒரு காவியம் என்று பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து மகேஷ்பாபு கூறும்போது, “இங்கே திரைப்படங்கள் மற்றும் ராஜமவுலியின் திரைப்படங்கள் என இரண்டு விதமான படங்கள் இருக்கின்றன. அந்த அளவிற்கு ஒரு காவியமாக இந்த படத்தை கொடுத்துள்ளார் ராஜமவுலி. படத்தின் பட்ஜெட், பிரமிக்க வைக்கும் காட்சிகள், இசை, உணர்வுகள் என அனைத்துமே கற்பனைக்கு அப்பாற்பட்டவை. நம்மை மூச்சு விடக்கூட மறக்க செய்பவை. குறிப்பாக படத்தில் உள்ள பல காட்சிகளை நீங்கள் பார்க்கும்போது உங்களை மறந்து கதிக்குள் உங்களையே இணைத்து கொள்ளும் அளவிற்கு அப்படி ஒரு திரை அனுபவத்தை இந்த படம் கொடுத்திருக்கிறது. அப்படி ஒரு பரபரப்பான படத்தை கொடுத்துள்ளார் மாஸ்டர் ராஜமவுலி.
மேலும் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் இருவருமே நட்சத்திரங்கள் என்பதையும் தாண்டி அவர்களது நடிப்பால் பிரமிக்க வைத்து உள்ளார்கள். குறிப்பாக நாட்டு நாட்டு பாடலில் புவியீர்ப்பு விசை என்பது இருக்கின்றதா என்பதே தெரியவில்லை. அந்த அளவிற்கு இருவரும் பறந்து இருக்கிறார்கள். இதுபோன்ற அற்புதமான படைப்பை கொடுத்ததற்காக மொத்த படக்குழுவிற்கும் எனது வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார் மகேஷ்பாபு.