வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
காஷ்மீரில் 1990களில் இந்து பண்டிட்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதை கதை களமாக கொண்டு உருவாகியுள்ள படம் தி காஷ்மீர் பைல்ஸ். இந்த படத்தை பிரதமர் முதல் பல தலைவர்கள் பாராட்டி உள்ளார்கள். பல மாநிலங்கள் வரிவிலக்கு அளித்துள்ளது. 19 கோடியில் தயாரான படம் 200 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்து வருகிறது.
ஆனால் சில அமைப்புகள் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் பாலிவுட் நடிகரான ஆமீர்கான் காஷ்மீர் பைல்ஸ் படம் ஒவ்வொரு இந்தியரும் பார்க்க வேண்டிய படம் என்று கூறியிருக்கிறார்.
மும்பையில் நடந்த ஆர்ஆர்ஆர் பட அறிமுக விழாவில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: ஒவ்வொரு இந்தியரும் 'காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படத்தை பார்க்க வேண்டும். மனிதநேயம் உள்ள அனைவர் மனதையும் இந்தப் படம் உணர்ச்சிவசப்பட வைக்கும். கண்டிப்பாக நான் இந்தப் படத்தை பார்ப்பேன். தியேட்டர்களில் காஷ்மீர் பைல்ஸ் வெற்றிகரமாக ஓடுவதை பார்க்கும்போது சந்தோஷமாக உள்ளது. என்று பேசினார்.