ஹிந்தி நடிகர் தர்மேந்திரா காலமானார் | தளபதி திருவிழா : விஜய்க்காக களமிறங்கும் பிரபல பாடகர்கள் | 100 கோடிக்கு மேல் விற்கப்பட்டதா 'ஜனநாயகன்' ? | ரூ.10 கோடி டெபாசிட் செய்ய விஷாலுக்கு கோர்ட் உத்தரவு | விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத் படத்தின் படப்பிடிப்பு நிறைவு | ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு கீர்த்தி சுரேஷ் படம் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நிவேதா பெத்துராஜ் | 2025 : 11 மாதங்களில் 250ஐக் கடக்கும் தமிழ்ப் பட வெளியீடுகள் | படம் இயக்க தயாராகும் கிர்த்தி ஷெட்டி | சிக்ஸ் பேக் மூலம் என்னை நானே செதுக்கி கொண்டேன் : மகத் சொல்கிறார் |

ஒத்து செருப்பு படத்தில் பார்த்திபன் மட்டுமே நடித்திருந்தார். படமும் ஒரு லாக்அப்பில் மட்டுமே நடக்கும். இந்த படம் தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றது. தற்போது இது இந்தியில் ரீமேக் ஆகி வருகிறது. அபிஷேக் பச்சன் நடித்து வருகிறார். இந்த நிலையில் பார்த்திபன் இயக்கியுள்ள இன்னொரு படம் இரவின் நிழல். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். இந்த படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டிருப்பதாக பார்த்திபன் அறிவித்தார்.
ஆனால் சமீபத்தில் இந்த படம் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டதல்ல வெட்டி ஒட்டப்பட்டுள்ளது என்று விழாக்குழுவினர் படத்தை நிராகரித்துள்ளனர். இதனை பார்த்திபன் நடித்துள்ள யுத்த சத்தம் பட விழாவில் அவரே தெரிவித்தார். கேன்ஸ் திரைப்பட விழா மிக சிறந்த கலைஞர்கள், திரைப்பட தொழில்நுட்ப கலைஞர்களால் நடத்தப்படுவது. அவர்கள் ஒரு முடிவெடுத்தால் அது சரியானதாக இருக்கும் என்று ஒரு தரப்பினர் கூறிவருகிறார்கள்.
பொதுவாக இந்திய படங்களை வேறொரு கண்ணோட்டத்தில் பார்ப்பது மேற்கத்திய பார்வை. அதனால் எத்தனை சிறந்த படமாக இருந்தாலும் ஆஸ்கர் விருது முதல் கேன்ஸ் வரை புறக்கணிக்கப்படுகிறது என்றும் கருத்துகள் வெளியாகிறது. ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தாலும் அது ஹாலிவுட் படத்துக்குரியது என்கிறார்கள். இதற்கிடையில் தொழில்நுட்ப கலைஞர்களை கொண்ட குழு இரவின் நிழல் படத்தை பார்த்து அது ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது என்பதற்கு சான்றழிக்க வேண்டும் என்ற கருத்தும் கூறப்பட்டு வருகிறது.