ரஜினியே ரத்தத்தை நம்பி தான் படம் எடுக்கிறார் : ராதாரவி பேச்சு | இந்து தர்மத்தை சினிமாவில் சொல்வதை நினைத்து பெருமைப்படுகிறேன் : ‛ஹனுமன்' ஹீரோ | பார்வையாளர்களின் பதிலை மட்டுமே மதிக்கிறேன் : பல்லவி ஜோஷி | 100 மில்லியன் கடந்த 'முத்த மழை' மேடைப் பாடல் | 'மிராய்' டிரைலரைப் பார்த்து வாழ்த்திய ரஜினிகாந்த் | அல்லு அர்ஜுன், பவன் கல்யாண் 'மனஸ்தாபம்' முடிவுக்கு வந்ததா ? | 'கைதி 2' படத்திற்கு இசை அனிருத்? | சமூக வலைத்தள கொள்ளையர்கள் : IFTPC காட்டம் | பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி |
இயக்குனர் வெற்றிமாறன் தற்போது சூரி மற்றும் விஜய் சேதுபதியை வைத்து இயக்கியுள்ள விடுதலை படத்தின் இறுதிகட்ட பணிகளை கவனித்து வருகிறார். இதற்கு பிறகு நடிகர் சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தை விரைவில் துவங்க இருக்கிறார். இந்நிலையில் வாடிவாசல் படத்தில் வெற்றிமாறனின் உதவி இயக்குனராக கருணாஸ் இணைந்துள்ளார்.
இது குறித்து கருணாஸ் கூறுகையில் "கிராமிய கானா பாடகராக என் கலையை வாழ்க்கையை தொடங்கியிருந்தாலும், இவ்வளவு பெரிய அடையாளத்தையும், அறிமுகத்தையும் கொடுத்தது சினிமாதான். தாய்மடியான தமிழ் சினிமாவில் முழு நேரமும் பயணிக்க முடிவெடுத்திருக்கிறேன். ஆற்றல்மிகு இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணியாற்ற உள்ளேன். கடைசிவரை கற்றுக் கொள்வது தான் சினிமாவின் சிறப்பு. என்னை இணைத்துக்கொண்ட வெற்றிக்கு நன்றி" என்றார்.