சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, பிரியங்கா அருள் மோகன், சத்யராஜ், வினய், சூரி உள்ளிட்டோர் நடிப்பில் தயாராகியிருக்கும் படம் 'எதற்கும் துணிந்தவன்'. இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. படக்குழுவினருடன் ஆயிரக்கணக்கான ரசிகர்களும் கலந்து கொண்டனர்.
விழாவில் சூர்யா பேசுகையில், '' இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு ரசிகர்களை சந்திக்கிறேன். அதனால் மகிழ்ச்சி அடைகிறேன். நாம் இங்கு மகிழ்ச்சியுடன் இருக்கிறோம். ஆனால் உக்ரைனில் எதுவுமே அறியாத அப்பாவி மக்கள், குழந்தைகள், பெண்கள் என பலர் உயிரிழந்திருக்கிறார்கள். எனக்கு கூட்டு பிரார்த்தனை மீது நம்பிக்கை இருக்கிறது. இன்னும் அங்கு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கலில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. அங்குள்ள இந்தியர்களும், இந்திய மாணவர்களும் பாதுகாப்பாக தாயகத்திற்கு திரும்ப வேண்டுமென ஒரு சில நிமிடங்கள் நாம் அனைவரும் கூட்டாக பிரார்த்திப்போம்.
நான் திரையரங்கில் தான் நிறைய விசயங்களை கற்றுக் கொண்டேன். வெற்றி படமா.. தோல்வி படமா.. நல்ல படமா.. தரமான படமா.. என்பதை திரையரங்குகள் மூலமாகத்தான் கற்றுக்கொண்டேன். அதுவும் ரசிகர்கள் மூலமாகவே அதனை சந்தித்திருக்கிறேன். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்குகளில் ரசிகர்களையும், குடும்ப ரசிகர்களையும் காண ஆவலுடன் காத்திருக்கிறேன். அதற்கு பொருத்தமான படமாகத்தான் 'எதற்கும் துணிந்தவன்' தயாராகியிருக்கிறது.
இழக்கத் தயாராகி, புது முயற்சியுடன் பயணப்பட்டால் ஏராளமான இலக்குகளை அடையலாம். இழப்பதற்கு நீங்கள் தயாராக இருந்தால் அடைவதற்கு ஏராளமான விசயங்கள் இருக்கிறது. கோவிட்டால் கடந்த இரண்டு ஆண்டுகாலம் அனைத்தும் புரட்டிப் போடப்பட்டிருக்கிறது. எல்லா விசயத்திலும் எல்லை தாண்டி சிந்திக்காதீர்கள். உங்கள் இதயம் என்ன சொல்கிறதோ..! அதை மட்டும் கேளுங்கள்.
'இந்தப் படம் எதற்கும் துணிந்த ரசிகர்களான உங்களுக்குத்தான். உங்களுக்காகத்தான்'. இந்தப்படத்தில் யாரும் பேசாத ஒரு விசயத்தை, பொறுப்புணர்வுடனும் அற்புதமான கதையாக விவரித்திருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ்.
'ஜெய்பீம்' பட வெளியீட்டின்போது சில எதிர்பாராத சின்ன சின்ன சம்பவங்கள் நடைபெற்றது. சில தவறுகளும், சில தர்ம சங்கடங்களும் ஏற்பட்டன. சில இடங்களில் ரசிகர் மன்றங்களை சேர்ந்தவர்கள் பல நெருக்கடிக்கு ஆளானார்கள். அதனை ரசிகர் மன்றத்தினர் மிகவும் பக்குவப்பட்ட மனநிலையில் கையாண்டனர். இதையும் நான் பார்த்தேன். இந்த இளம் வயதில் உங்களிடம் இருந்த பக்குவத்தை கண்டு நான் வியந்தேன். அதற்கு நான் தலை வணங்குகிறேன். கடந்த 25 ஆண்டு காலமாக என் மீது அன்பு செலுத்தி வரும் ரசிகர்களை கடவுளாக தான் காண்கிறேன். மார்ச் 10ஆம் தேதி முதல் மாற்றத்திற்கு தயாராக இருங்கள்.'' என்றார்.