நாயகியை 'டிரோல்' செய்ய வைத்தாரா நடிகரின் மேனேஜர்? | தள்ளிப் போகிறதா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | காந்தாரா 2 படப்பிடிப்பு நிறைவு : மேக்கிங் வீடியோ வெளியிட்டு ரிஷப் ஷெட்டி அசத்தல் | என்னங்க பண்ணுறது, அப்படிதான் வருது : ‛எட்டுத் தோட்டாக்கள்' வெற்றி | வருத்தத்தில் கயாடு லோஹர் | ஜி.வி.பிரகாஷ் விட்டுக்கொடுத்த பல கோடி சம்பளம் | பாலிவுட்டில் வசூலைக் குவிக்கும் 'சாயரா' | 'நாட்டு நாட்டு' பாடகர் ராகுலுக்கு ரூ.1 கோடி பரிசு | நீண்ட இடைவெளிக்குப் பின் சினிமா பத்திரிகையாளர் சந்திப்பில் பவன் கல்யாண் | பாலிவுட்டுக்கு போன வேகத்திலேயே காதல் கிசுகிசுவில் சிக்கிய ஸ்ரீ லீலா! |
பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ள விஜய் அடுத்தபடியாக தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார். தமிழ். தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிப்பதாக கூறப்படுகிறது. தமன் இசையமைக்கும் இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். விஜய்யின் 66 ஆவது படத்தில் பிரபாஸ் நடிப்பில் தெலுங்கு, ஹிந்தியில் தயாராகி வரும் ஆதிபுருஷ் என்ற ராமாயண இதிகாச படத்திற்கு ஒளிப்பதிவு செய்யும் கார்த்திக் பழனி என்பவர் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கீர்த்தி சுரேஷ் நடித்த பென்குயின் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த இவர், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார்.