இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
திருமணத்திற்கு பின்னும் பல படங்களில் நடித்து வந்த அமலாபால், விவாகரத்து பெற்ற பிறகு முன்னைவிட தீவிரமாக படங்களில் நடிப்பார் என நினைத்தால் அதற்கு மாறாக படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களாக, நாயகியை மையமாக வைத்து உருவாகும் படங்கள் என நடித்து வருகிறார்.
பிரித்விராஜ் ஜோடியாக அவர் நடிக்கும் ஆடுஜீவிதம் படமும் கூட பாதி தான் முடிவடைந்துள்ளது. இந்தநிலையில் தற்போது மலையாளத்தில் டீச்சர் என்கிற படத்தில் நடிக்கிறார் அமலாபால்.. பஹத் பாசில் நடித்த அதிரன் என்கிற படத்தை இயக்கிய விவேக் தான் இந்தப்படத்தை இயக்குகிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு இன்று(பிப்., 16) துவங்கியுள்ளது.
படத்தின் டைட்டிலுக்கு ஏற்றமாதிரி அமலாபால் இந்தப்படத்தில் டீச்சராகத்தான் நடிக்கிறாராம். ஏற்கனவே தமிழில் பசங்க-2, ராட்சசன் ஆகிய படங்களில் அமலாபால் டீச்சராக நடித்துள்ளார்.