அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் | காதலில் விழுந்தாரா 'காந்தா' நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் |

'டெடி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ஆர்யாவும், இயக்குநர், தயாரிப்பாளர் சக்தி சவுந்தர் ராஜனும், 'கேப்டன்' என்னும் அதிரடி சயின்ஸ்பிக்சன் திரைப்படத்தில் இணைந்துள்ளனர். இப்படத்தை திங்க் ஸ்டூடியோஸ் நிறுவனம், நடிகர் ஆர்யாவின் தி ஷோ பீபிள் உடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபரில் துவங்கி, தற்போது நிறைவடைந்துள்ளது.
இந்த படத்தின் முக்கிய காட்சிகளை வடஇந்தியாவின் அடர்ந்த காடுகளில் படமாக்கிய படக்குழு, அதை தொடர்ந்து குளு மணாலியில் இறுதி கட்ட காட்சிகளை படமாக்கியுள்ளனர். போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில், விரைவில் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
'கேப்டன்' படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா லக்ஷ்மி, கோகுல் ஆனந்த், சுரேஷ் மேனன், காவ்யா ஷெட்டி, ஹரிஷ் உத்தமன், பரத் ராஜ் மற்றும் இன்னும் பல முக்கிய நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். டி.இமான் இசையமைக்கிறார், யுவா ஒளிப்பதிவு செய்கிறார்.